என் வீட்டை மருத்துவமனையாக்க தயார்! – கமல்ஹாசன் ட்வீட்

kamalhasan
Prasanth Karthick| Last Modified புதன், 25 மார்ச் 2020 (15:29 IST)
அரசு அனுமதி அளித்தால் தனது வீட்டை மருத்துவமனையாக மாற்ற தயாராக இருப்பதாய் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். உங்கள் நான்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அரசு மருத்துவமனைகள் தவிர தனியார் கிளினிக்குகள், மருத்துவமனைகளிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்காத சூழலில் கமல்ஹாசனுக்கு அனுமதி அளிப்பது சந்தேகமே என்று பேசிக்கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :