வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 25 மார்ச் 2020 (15:29 IST)

இந்தியா திரும்பிய ஸ்ருதி ஹாசன்... தனிமைப்படுத்தப்பட்ட கமல் குடும்பம்!

நடிகர் கமல் ஹாசனனின் குடும்பம் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய ஸ்ருதி ஹாசன் கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். மேலும் தாயார் சரிகா மும்பையில் உள்ள வீட்டிலும், அக்ஷரா ஹாசன் மற்றும் கமலஹாசன் சென்னையில் தனி தனி வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை கொஞ்சம் கடினமாக இருந்தாலும் மற்றவர்களின் நலன் கருதி பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தற்போது என்னுடன் உதவியாளர்கள் யாரும் இல்லை. கிளாரா( பூனை) மட்டும் தான் என்னுடன் இருக்கிறது. என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசனின் இந்த செயலுக்கு இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னர் இதே போல் நடிகை சுகாஷினி மணிரத்தினம் வெளிநாட்டிலிருந்து திரும்பிய தனது மகனை கண்ணாடி பொருத்தப்பட்ட அறையில் தனிமைப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.