திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2017 (09:47 IST)

மதுரையில் மாநாடு? - அரசியல் ஆட்டத்தை தொடங்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் மதுரைவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
விரைவில் அரசியலுக்கு வர திட்டமிட்டிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்து விட்டார். இது தொடர்பாக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடனும், அரசியல் சார்பில்லாத இயக்கங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 
சமீபத்தில் கூட, கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்துவாரப் பகுதியில் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படு பாழடைந்த எண்ணூர் துறைமுகப் பகுதிகளில் அவர் திடீர் விசிட் அடித்தார். அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டார்.
 
அவர் தனது பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி அரசியல் பிரவேசம் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் என முதலில் செய்தி வெளியானது. ஆனால், அந்த திட்டம் எதுவுமில்லை என கமல் தெரிவித்துவிட்டார். மேலும், தனது ஆதரவாளர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு மொபைல் ஆப்-பை மட்டுமே அவர் நவம்பர் 7ம் தேதி வெளியிட இருக்கிறார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில் தனது நற்பணி மன்ற இயக்கத்தினர் இதுவரை செய்த பல சேவைகள், இனிமேல் செய்யப் போகும் பணிகள் குறித்து அவர் பேசவிருக்கிறார். அதற்கான விபரங்களை தனது நற்பணி மன்ற இயக்கத்தினரிடம் அவர் கேட்டுள்ளதாக தெரிகிறது.  
 
அரசியலை பொறுத்தவரை பல திருப்புமுனைகளை உண்டாக்கியது மதுரைதான். மேலும், கமலுக்கு அங்கு நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர். எனவேதான் அங்கு பொது பொதுக்கூட்டத்தை நடத்த கமல் திட்டமிட்டிருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை கமல் தனது பிறந்த நாளுக்கு பின் அறிவிப்பார் எனத் தெரிகிறது. 
 
எப்படி பார்த்தாலும், இந்த பொதுக்கூட்டம் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.