திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (17:58 IST)

அரசியல் தலையீடு சரியல்ல ; மக்களுக்கு எரிச்சலை தருகிறது - கமல்ஹாசன் டிவிட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 
இதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.  
 
இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக தரப்பிற்கு நிம்மதியையும், தினகரன், திமுக தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
 
இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் தலையீடு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது ஜனநாயகமும் இல்லை. டெல்லியில் என்ன நடக்கிறதோ அதுதான் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் நடக்கிறது. மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு இது எரிச்சலை தருகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.