திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 14 ஜூன் 2018 (16:48 IST)

அணுகுண்டா? புஸ்வானமா? தீர்ப்பு வெறும் ஊசி வெடிதான்: தமிழிசை!

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். எனவே, இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். 
 
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு:

இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். ஒரு நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என்கிறார். மற்றொரு நீதிபதி செல்லாது என்கிறார். 

தீர்வை தரும் தீர்ப்பை எதிர்பார்த்தோம். ஆனால், இந்த தீர்ப்பு தீர்வில்லாமல் வந்திருக்கிறது. இந்த தீர்ப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை.
 
வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்குமா அல்லது புஸ்வாணமாக ஆகிவிடுமா என எதிர்பார்த்திருந்த நிலையில், இத்தீர்ப்பு ஊசிவெடியாக வெடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.