திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (15:56 IST)

காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன் அதிரடி

காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராக இருப்பதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 
ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆகியோரை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருக்கும் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முடியாததால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியை தொடங்கினார். மேலும், தமிழ்நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பது, நிர்வாகிகளை நியமிப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில், இன்று பெங்களூர் சென்று அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அவர் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எங்களுக்கு இல்லை. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகி எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பினால் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் பேட்டியளித்தார்.