திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (19:20 IST)

இதற்காகத்தான் மீண்டும் பிக்பாஸ் - கமல்ஹாசன் சூட்சம பதில்

அரசியலில் இறங்கிய பின் எதற்காக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்கிற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. 
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகம் விரைவில் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே நடத்த இருக்கிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடத்த நேர்காணலில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, அரசியலில் தீவிரமாக செயல்படும் போது பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் ஏன் நடத்துகிறீர்கள்? என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த கமல் “மக்களிடம் சென்று சேர அந்த நிகழ்ச்சியை நான் சரியாக பயன்படுத்திக் கொள்கிறேன். நிகழ்ச்சிகளின் நடுவே நான் செய்யும் கண் ஜாடைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். அந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வோர் வீட்டிற்குள்ளும் நான் செல்கிறேன். அதை எனக்கு பயன்படுத்திக் கொள்வேன்” என அவர் தெரிவித்தார்.