ரஜினிக்கு போட்டி; கமலின் திட்டவட்டமான முடிவு

kamal
Last Updated: வெள்ளி, 5 ஜனவரி 2018 (08:12 IST)
நடிகர் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதிபடுத்தியுள்ள நிலையில் அவருக்கு முன், அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கமல், 'தன் முடிவில் மாற்றம் இல்லை' என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். உண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை என்று கூறிய ரஜினியின் அரசியல் வருகையை பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் வருகின்றனர்.
 
இந்நிலையில் ரஜினிகாந்திற்கு முன்பு அரசியல் அறிவிப்பை வெளியிட்ட கமல் நேற்று ஆர்.கே நகர் வெற்றியைப் பற்றி விமர்சனம் செய்தார். அதில் ஆர்.கே.நகரில் டிடிவி தினரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டிய விஷயம் என்று கூறினார். ஆங்கிலேயர் நம்மிடம் ரோட்டையும், ரயில் நிலையத்தையும் விட்டுச்சென்று விலைமதிப்பில்லா கோஹினூர் வைரத்தை திருடிச் சென்றனர். அதே போல் ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களின் விலைமதிப்பில்லா ஓட்டுகளை சிலர் பறித்து சென்றது வெட்கக்கேடான விஷயம் என்றார். அது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது என்று கடுமையாக விமர்சித்தார். 
 
தனது சினிமா பணிகளை முடித்துவிட்டு, அரசியலுக்கு செல்லவிருப்பதை அறிந்த அமெரிக்காவில் உள்ள எனது நண்பர்கள் அங்குள்ள வாய்ப்பை பட்டியலிட்டு 'அரசியல் வேண்டாம்' என்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் அவலத்திற்கு என்னை இங்குள்ள சிலர் ஆளாக்கி விட்டனர் என்று அவர்களிடம் கூறினேன். என் பழைய பேட்டிகளில் கூறியதைப் போல், அரசியலுக்கு வருவேன் என மறுபடியும் கூறுகிறேன் என்று திட்டவட்டமாக கமல் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :