1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (15:03 IST)

அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு - கமல்!

ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என கமல் சசிகலாவை சீண்டும் வகையில் பேசியுள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் மநீம வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 
 
அந்த வகையில் தனது சமீபத்திய பிர்ச்சாரத்தின் போது அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் ரூ.300 கோடி வருமானம் இழப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அதைப்பற்றீ எனக்கு கவலையில்லை. ஊழல் செய்தவர்கள் ஜெயிலுக்கு சென்றாலும் ஷாப்பிங் செய்யும் அளவிற்கு வசதியாக உள்ளனர் என கமல் சசிகலாவை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.