திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:30 IST)

விக்ரம் படத்தை இரண்டு பாகமா எடுக்கிறாரா லோகேஷ்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளம் இசைப்புயல் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பது தெரிந்ததே. 

இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தைப் பற்றிய புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பொன்னியின் செல்வன் புஷ்பா ஆகிய திரைப்படங்களைப் போல விக்ரம் படத்தையும் இரண்டு பாகமாக வெளியிடலாமா என்ற யோசனையில் விக்ரம் குழு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப் பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.