திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (16:40 IST)

நல்லக்கண்ணுவுடன் கமல் சந்திப்பு:

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பேதமின்றி பல கட்சிகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்து வருகிறார். மேலும் அரசியல் கட்சியை பதிவு செய்வது குறித்து நேற்று டி.என்.சேஷனுடன் ஆலோசனை செய்த கமல், தன்னை எதிர்த்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தையும் சந்தித்தார்.

இந்த நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரருமான நல்லக்கண்ணு அவர்கள் இன்று மதியம் கமல்ஹாசனின் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பும் வழக்கம்போல் மரியாதை நிமித்த சந்திப்பு என்றே கூறப்பட்டது.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: கட்சியை தாண்டி மக்களுக்காக சேவை செய்து வருவதால் நல்லகண்ணுவை சந்தித்தேன் இடதுசாரி தலைவர்களை மட்டும் அல்ல அனைவரையும் சந்திப்பேன்' என்று கூறியுளார். கமல்ஹாசனின் இந்த பாசிட்டிவ் நடவடிக்கை அனைவரையும் கவர்ந்துள்ளது.