வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 பிப்ரவரி 2018 (14:57 IST)

எம்.ஜி.ஆரின் தனிச்செயலருடன் சந்திப்பு - அடுத்தடுத்து அதிரடி காட்டும் கமல்ஹாசன்

அதிமுகவை தோற்றுவித்தவரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரிடம் பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.

 
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார்.
 
அந்நிலையில், அவர் பல முக்கிய நபர்களை சந்தித்து சில ஆலோசனைகளை கேட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்தில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷனை , அவரது இல்லத்திற்கு சென்று கமல்ஹாசன் சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.
 
அதேபோல், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜை சந்தித்து பேசினார். 
 
மேலும், இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை தி.நகரில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்று கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார்.