செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (10:33 IST)

ஒரு கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதா? அதிர்ச்சி தகவல்!

இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனையில் ஒரு கோடி தடுப்பூசி வரை பயன்படுத்தப்படாமல் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒருசில தனியார் மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்பது குறிபிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ஒரு கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளதாக தெரியவந்துள்ளது, இதில் 15 முதல் 20 சதவீதம் தடுப்பூசிகள் அடுத்த மாதத்தில் காலாவதியாகும் நிலையில் உள்ளதால் இது குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
பெரும்பாலும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் மக்கள் செலுத்தி வருகின்றனர் என்பதும் தனியார் மருத்துவமனைக்கு செல்வது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது