திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (18:42 IST)

திமுக பேசுகிற சமூகநீதி எல்லாம் வெறும் "லிப்சர்வீஸ்தான்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி முதல் முதலாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுகிறார் என்பதும் அவரது கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது திமுகவை வெளுத்து வாங்கினார். சமூக நீதியை மொத்த குத்தகைக்கு எடுத்தவர்கள் போல் பேசிக் கொண்டிருப்பவர்கள் என்றும், அதை அவர்கள் மனதளவில் நினைப்பதாக எனக்கு தோன்றவில்லை என்றும் எல்லாமே லிப்சர்வீஸ் உதட்டளவில் கூறினார்.
 
கீழ் சாதியில் இருந்த உங்களுக்கு உயர்வு கொடுத்தது நாங்கள் போட்ட பிச்சை என்று பேசுகிறார்கள். சமூக நீதி என்பது ஒரு ஈகை அல்ல அது எங்களுடைய உரிமை என்று கமல்ஹாசன் பேசினார். திமுகவை அவர் நேரடியாக குறிப்பிடப்பட்டாலும் மறைமுகமாக திமுகவை தாக்கி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.