திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (12:04 IST)

மூன்று தலைமுறை அனுபவம் உங்களுக்கு உதவும்: அமைச்சர் உதயநிதிக்கு கமல் வாழ்த்து!

kamal udhayanidhi
மூன்று தலைமுறை அனுபவம் உங்களுக்கு உதவும் என்று இன்று அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதிக்கு உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மகனும் சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமைச்சரான உதயநிதிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியிருப்பதாவது:
 
வாழ்த்துகிறேன் தம்பி  உதயநிதி ஸ்டாலின்.  அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.
 
 
Edited by Mahendran