“தேச பக்தரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்”; கோட்ஷேவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் கமல்
காந்தி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தேச பக்தர் என்று அழைக்கப்படும் ஒருவரால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் என கோட்ஷேவை கிண்டல் செய்யும் தொனியில் நடிகர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.
1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்தியர்களால் மகாத்மா என்று அழைக்கப்படும் அகிம்சை வழியில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த சமூக போராளி மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, நாதுராம் கோட்ஷேவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடம் ஜனவரி 30 ஆம் ஆண்டு காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தேச தலைவர்கள் பலரும் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனிடையே நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,
”உலக அமைதியின் தூதுவரும் எனது ஒளியுமான மகாத்மா காந்தி, தேசப்பக்தன் என்று அழைக்கப்படும் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கரூரில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “கோட்ஷே ஒரு இந்து தீவிரவாதி” என கூறியது சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் கோட்ஷேவை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.