செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (10:45 IST)

கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள்: கமல்ஹாசன் ட்வீட்

டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கமல்ஹாசன் ஆம் ஆத்மி கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இந்திய தலைநகரான டெல்லிக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அங்கு முதல்வராக பதவி வகித்து வருகிறார். தற்போது சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது.

இதற்கான தேர்தல் பிரச்சார பணிகள் டெல்லியில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். அதில் ”கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள். அவரை உள்வாங்கி கொள்ளுங்கள். இது அறிவுரை அல்ல. நமக்கு விடப்பட்டிருக்கும் சவால். நான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். எனது நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சல்யூட் செய்கிறேன்” என கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பதிவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.