செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (17:22 IST)

44 ஆண்டுகளாக நடைபெறும் விஸ்வரூப தரிசனத்தை காண வாருங்கள்: கமல்ஹாசன் அழைப்பு

44 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விஸ்வரூப தரிசனத்தை காண வாருங்கள் என சென்னை புத்தக கண்காட்சி குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
சென்னையில் கடந்த 43 ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சி நடைபெறும் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு 44 வது ஆண்டாக வரும் 24-ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் மைதானத்தில் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்த புத்தக கண்காட்சியை அனைவரும் வாருங்கள் என கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.