செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:36 IST)

சென்னை புத்தக விழாவில் ஸ்டால் போட்ட மய்யத்தார்! – தேர்தல் பரப்புரை திட்டமா?

சென்னை புத்தக விழாவில் கமல்ஹாசனின் மய்யம் பதிப்பகம் சார்பாக ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கிய கமல்ஹாசன் தினமும் ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்து வந்தார். இதனால் அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் பிரபலமானதுடன், பதிப்பில் இல்லாத சில புத்தகங்கள் மறுபதிப்பும் கண்டு வருகின்றன.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி மநீமவின் மய்யம் பதிப்பகம் சென்னை புத்தக விழாவில் ஸ்டால் அமைத்துள்ளது. மேலும் அந்த ஸ்டாலில் மக்கள் நீதி மய்யத்தின் மக்கள் சேவைகள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியும், மநீம குறித்து விரிவாக எடுத்துரைக்க தன்னார்வலர்களையும் ஏற்படுத்தியுள்ளதாக மய்யம் பதிப்பகத்தின் டைமண்ட் பாபு தெரிவித்துள்ளார்.