1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (14:53 IST)

ஆன்மீகம் அடிப்படையில் ரஜினிதான் அதற்கு பொருத்தமானவர்; கமல்ஹாசன் அதிரடி

ரஜினியின் ஆன்மீக நம்பிக்கை போன்றவற்றை வைத்து பார்த்தால் அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க பொருத்தமானவர் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


 

 
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசம் குறித்து கூறியதாவது:-
 
தனித்தமிழ்நாடு கேட்ட அண்ணாதுரை பின்னர் அக்கோரிக்கையை கைவிட்டார். தனித்தமிழ்நாடுக்கான கோரிக்கைகள் இன்னும் அப்படியேதான் உள்ளது. நானும் அதையேதான் சொல்கிறேன். இந்தியாவை விட்டு தனியாக செல்ல வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. தமிழகத்திற்கு என்ன பிரச்சனை என்பது குறித்து டெல்லி பேச வேண்டும்.
 
உரையாடல் அவசியம், ஆனால் உரையாடல் ஒற்றை வழி உரையாடலாக உள்ளது. கேட்டு தெரிந்துக்கொள்ளும் உரையாடலாக இல்லை. தமிழகத்திற்கு டெல்லி என்றால் அச்ச உணர்வு உள்ளது. நல்ல திட்டமாக இருந்தால் கூட டெல்லி கொண்டு வந்தாலே அதை அச்சதோடு பார்க்கும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. 
 
நான் அரசியல் பிரவேசம் செய்த பின் தமிழகத்திற்கு நல்ல நாள் பிறக்கும் என நம்புகிறேன். நான் ரஜினியிடம் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். ரஜினி என்னுடைய நண்பர்தான். நான் ஏற்கனவே அவரிடம் அரசியலுக்கு வருவது குறித்து தெரிவித்துவிட்டேன்.
 
நான் எப்போது கட்சி தொடங்குவேன் என குறிப்பிட முடியாது. ரஜினியின் கொள்கை குறித்து என்னால் பேச முடியாது. ஆனால், அவரது ஆன்மீக நம்பிக்கை போன்றவற்றை வைத்து பார்த்தால் அவர் பாஜகவுடன் கூட்டணி வைக்க பொருத்தமானவர் என்றார்.