வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:52 IST)

கமலை விளாசும் ஜெயக்குமார்: முதல்வர் பதவி என்ன பொம்மையா?

கமலை விளாசும் ஜெயக்குமார்: முதல்வர் பதவி என்ன பொம்மையா?

தமிழக அரசியல் குறித்து சமீப காலமாக விமர்சித்து வரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன் என கூறியிருந்தார். மேலும் 100 நாட்களில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க உள்ளதாகவும், மக்களுக்காக முதல்வராக விரும்புவதாகவும் கூறினார்.


 
 
கமலின் ஒவ்வொரு கருத்துக்களுக்கும் அதிமுக அமைச்சர்கள் பதில் கூறியே வருகின்றனர். ஏற்கனவே கமல் முதல்வர் ஆக விருப்பம் தெரிவித்தது குறித்து அதிமுகவினர் கருத்து கூறியுள்ள நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கமலை விமர்சனங்களால் விளாசியுள்ளார்.
 
இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆரிலிருந்து ஜெயலலிதா வரை அனைவரும் முதலில் எம்எல்ஏ ஆகி, எதிர்க்கட்சித் தலைவராகி மக்களுக்கு சேவை செய்தார்கள். யாருமே நான் 100 நாளில் முதல்வராவேன் என்று சொல்லவில்லை.
 
கமல்ஹாசன் சினிமா நூறு நாள் ஓடுவதுபோல அரசியலையும் நினைத்துக் கொண்டார் போல. முதல்வர் பதவி என்ன மூர் மார்க்கெட்டில் விற்கும் பொம்மையா வாங்கிக்கொள்ள? என்றார் ஜெயக்குமார். மேலும் நடிகர் சிவாஜியால் கூட எம்எல்ஏ ஆக முடியவில்லை. கூட்டம் கூடுவதெல்லாம் ஓட்டாக மாறிவிடாது. ஒட்டாக மாற வேண்டுமென்றால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். வெறும் டுவிட்டரில் மட்டும் இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.