1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (05:40 IST)

ராஜாஜி ஹாலில் கருணாநிதி உடல்: விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை அடுத்து திமுக தொண்டர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் உள்ளனர்.
 
கடைசியாக கருணாநிதியின் முகத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கருணாநிதியின் உடல் வைக்கப்படவுள்ள ராஜாஜி ஹாலில் விடிய விடிய தொண்டர்கள் காத்திருந்தனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 
 
மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் ஏற்கனவே ராஜாஜி ஹாலில் காத்திருக்கின்றனர். ஜெயலலிதா வைக்கப்பட்ட அதே இடத்தில் கருணாநிதியின் உடலும் வைக்கப்படுகிறது