செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:55 IST)

தமிழகத்தில் அந்த மாற்றம் ஏற்படவே ஏற்படாது: கமல்ஹாசன்

தபால்துறை தேர்வுகளை தமிழ் உள்பட பிராந்திய மொழிகளில் எழுத முடியாது என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என்றும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது
 
இந்த அறிவிப்புக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெரிதாக எதிர்ப்பு கிளம்பியதாக செய்திகள் வெளிவரவில்லை. ஆனால் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் அதிகம் என்பதால் இங்குள்ள தமிழக அரசியல் கட்சிகள் இதனை பெரிதாக்கி வருகின்றன. 
 
இந்த நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து கூறியதாவது: இந்தியை மாணவ பருவத்தில் இருந்தே மறுத்து கொண்டிருக்கும் நம்மை, இப்பொழுது மாற்றம் ஏற்படுத்த முடியும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பது ஆச்சரியமாக இருக்கின்றது. தமிழகத்தில் அந்த மாற்றம் ஏற்படவே ஏற்படாது என்று உறுதியாக உயிர்த்துடிப்புள்ள ஒரு தமிழனாக என்னால் சொல்ல முடியும்
 
முன்னதாக இன்று நடைபெற்று வரும் திரைப்பட நடனக்கலைஞர்கள் சங்கத்தேர்வில் தனது வாக்கை கமல்ஹாசன் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது