ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:02 IST)

மதுமிதா காப்பாற்றப்பட்டதும் சாண்டி செய்த காமெடி

பிக் பாஸ் வீட்டில் வெளியேறும் பட்டியலில் இருந்த வனிதா, மதுமிதா சரவணன் மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் 5 பேர்கள் இருந்த நிலையில் நேற்று மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார். இதனை அடுத்து மதுமிதா வனிதா, சரவணன் மீரா மிதுன் ஆகிய நால்வரில் ஒருவர் இன்று வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோ ஒன்றில் மதுமிதா காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் சாண்டி எழுந்து மதுமிதா எப்படி உணர்ச்சிவசப்படுவாரோ அதேபோல் உணர்ச்சிவசப்பட்டு நடித்துக் காண்பித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு ஏற்பட்டது. சாண்டியின் ஆட்டத்தை பார்த்த பார்வையாளர்களும் கமல்ஹாசஉம் ஆச்சரியம் அடைந்து சிரித்தனர். மதுமிதாவும் சாண்டியை செல்லமாக அடித்தார்.
 
இந்த நிலையில் தற்போது மதுமிதா காப்பாற்றப்பட்டுவிட்டதால் வனிதா, மீராமிதுன், சரவணன் ஆகிய மூவரில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அனேகமாக வனிதா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் வனிதா இன்னும் வீட்டில் வைத்திருந்தால் அதிக பிரச்சனைகள் வரும் என்றும் பிக் பாஸ் கருதுவது மட்டுமின்றி அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது மைக்கை கழட்டி தூக்கி எறிந்ததை பிக்பாஸ் ஒரு மிகப்பெரிய தவறாக பார்ப்பதாக கூறப்படுகிறது