தர்ஷன் - மீரா காதலுக்கு உதவி செய்யுங்கள்: கவினிடம் வேண்டுகோள் விடுத்த கமல்

Last Modified ஞாயிறு, 14 ஜூலை 2019 (09:37 IST)
பிக்பாஸ் வீட்டில் தினமும் ஒரு பிரச்சனை எழுந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று கமல் முன்னிலையில் எழுந்துள்ள பிரச்சனை மீராவை தர்ஷன் புரபோஸ் செய்தாரா? என்பதுதான். இதுகுறித்து தன்னிடம் ஷெரின் கேட்டதாகவும் அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை என்றும் தர்ஷன் கூறினார். அப்போது இடைமறித்த மீராமிதுன், நாம் ஏதாவது ஒண்ணு சொன்னால், அது திரிச்சி திரிச்சி எங்கேயோ போய் எப்படியோ முடிகிறது. நான் யார்கிட்டப்பா தர்ஷனை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னேன் என்று மீரா கேட்டார்.
இந்த நிலையில் சீரியஸாகி சென்று கொண்டிருக்கும் இந்த உரையாடலை ஜாலியாக திசை திருப்பும் முயற்சியில் கமல்ஹாசன் கவினிடம், 'நீங்கள் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுங்கள், நீங்கள் தான் இதற்கு சரியான நபர் என்று கூற பார்வையாளர்களும் சக போட்டியாளர்களும் கைதட்டி சிரித்தனர்.

அப்போது கவின், 'சார் நானே என் பிரச்சனையை தீர்க்க முடியாம ஜெயிலுக்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கேன், நீங்க என்னைப்போய் கோர்த்து விடுகின்றீர்களே என்று கூற கலகலப்புடன் முடிந்தது இன்றைய புரமோ
இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் மோகன் வைத்யா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 'சேஃப் என கமல் அறிவித்தார். எனவே இன்று வனிதா, மீராமிதுன், மதுமிதா மற்றும் சரவணன் ஆகிய நால்வரில் ஒருவர் வெளியேறுவர். அனேகமாக வனிதாவை பிக்பாஸ் வெளியேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கவும் வாய்ப்பு உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :