1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamalhaasan had breakfast at khalam home

அப்துல் கலாம் வீட்டில் உணவருந்திய கமல்ஹாசன்...

Kamalhaasan
முன்னாள்  மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் நடிகர் கமல்ஹாசன் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை இன்று மாலை மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் அறிவிக்கவுள்ளார். 
 
அதற்காக நேற்று இரவே ராமேஸ்வரம் சென்ற அவர் இன்று காலை 7.30 மணியளவில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, கமல்ஹாசனுக்கு அப்துல்கலாம் வீட்டில் விருந்து அளிக்கப்பட்டது. அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
 
அதன்பின், அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு கமல்ஹாசன் சென்றார். ஆனால், அங்கு செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அதன் பின்பு, மீனவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.  
அடுத்த கட்டுரையில்
கருணாநிதியை சந்தித்த 74 வயது திமுக தொண்டர் : வைரல் வீடியோ