1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (17:56 IST)

சிக்னல்களில் நிழல் பந்தல்கள்: புகைப்படத்துடன் கமல்ஹாசன் கோரிக்கை

Kamal
சிக்னல்களை காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள் வெயிலில் தவிப்பதை அடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன் இதேபோன்று சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் நிழற்குடை அமைக்கும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: வெயில் கொளுத்துகிறது. சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அவர்கள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலுக்கு அருகே இதுபோன்ற தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
 
 கமல்ஹாசன் கோரிக்கையை ஏற்று முக்கிய சிக்னல்களில் நிழற்குடைகள் அமைக்கும் பணியை தமிழக அரசு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்