1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:16 IST)

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் கதை இதுவா?

sivakarthikeyan
சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது 
 
சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அயலான் என்ற திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது 
 
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்
 
இந்த படத்தின் கதை குறித்து தகவல் தற்போது  இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க உள்ளார் என்றும் ஒரு ராணுவ வீரருக்கு ஏற்படும் பிரச்சனை மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த படத்தின் கதை அமைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது