கமல் வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிப்பா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Last Modified செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (09:29 IST)
நடிகர் கமல்ஹாசன் உள்பட விதிகளை மீறி கட்டிடம் கட்டிய 138 பிரபலங்களின் வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்பது குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை அருகேயுள்ள ஈசிஆர் சாலையில் நடிகர்கள் உள்பட பலர் சொகுசு பங்களாக்களை விதிகளை மீறி கட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் வந்தபோது, இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் டி.மோகன் என்பவரை ஐகோர்ட் நியமனம் செய்தது. அவர் தற்போது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் 138 பங்களாக்களும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதனையடுத்து விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள பங்களாக்களின் மின் இணைப்பை துண்டிக்க சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Ramya Krishnan
இந்த நிலையில் 138 பங்களாக்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட அந்த 138 பங்களாக்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை தாக்கல் செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளதை மின் இணைப்பை துண்டிக்கும் உத்தரவை நிறுத்தி வைத்த சென்னை ஐகோர்ட் இந்த வழக்கை ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த 138 பங்களாக்களில் கமல்ஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களின் பங்களாக்களும் அடங்கும் எனப்து குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :