புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:01 IST)

நீங்க நிம்மதியா இருக்கிங்களா? அப்ப நீங்க என் கட்சி இல்லை! கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது தனது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

கட்சிக்கு ஆள்சேர்க்க தனி இணையதளம், ஃபேஸ்புக் பக்கம், டுவிட்டர் பக்கம், செயலி என பல தொழில்நுட்ப வழிகளில் செயல்பட்டு வரும் கமல், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: “வணக்கம். நீங்கள் தமிழ்நாட்டில் சந்தோஷமாக,  நிம்மதியாக இருக்கிறீர்கள் என்றால், இந்த வீடியோவை பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டு நடப்பும், அரசியலும் நல்லபடியாக சென்றுக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்பினால் இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல. புறப்படுங்க... என்று கூறிவிட்டு சிறிது நேரம் கைக்கடிகாரத்தை பார்க்கின்றார். பின்னர் மீண்டும் தொடரும் கமல், வாவ். இன்னும் நீங்க இங்கத்தான் இருக்கீங்களா.. அப்ப நீங்க நம்ம கட்சி. அங்க என்ன செய்றீங்க. களத்திற்கு வாங்க. ” என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகிறது.