வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:57 IST)

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாற்றுத்திறனாளி: கமல்ஹாசன் வாழ்த்து!

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாற்றுத்திறனாளி: கமல்ஹாசன் வாழ்த்து!
சமீபத்தில் ஐஏஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானதில் அதில் கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவர் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு கமலஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவர் பேசும் மற்றும் கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடங்களை அவருடைய தாயாரை படிக்க வைத்து அவருடைய வாயசைவின் மூலம் அவர் என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டு அதை வைத்து படித்து, தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதுவும் முதல் முறையிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி ரஞ்சித் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கோவை ரஞ்சித் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்  கோவை ரஞ்சித். பேசும், கேட்கும் திறன்கள் இல்லாத சவாலை வென்ற அவர் தேர்வு வெற்றியிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். இனி அவர்  பேச்சை இந்தியா கேட்கட்டும். மனமாரப் பாராட்டுகிறேன்.