1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (16:40 IST)

கார் ரேஸர் நரேன் கார்த்திக்கேயன் மீது போலிஸ் வழக்கு!

தமிழகத்தைச் சேர்ந்த கார் ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் மீது கோவை தொண்டாமூத்தூர் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நரேன் மீது பிருத்வி ராஜ்குமார் என்பவர் கொடுத்த அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது நிலத்துக்கு செல்லும் பாதையை மறித்து நரேன் வேலி போட்டுள்ளதாக அவர் புகார் கொடுத்துள்ளார். இதே போல நரேன் கார்த்திகேயனின் நிறுவனத்தில் பணியாற்றும் கோகுல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிருத்வி ராஜ்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.