செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (18:04 IST)

பா ரஞ்சித் படத்தில் இருந்து விலகிய அட்டகத்தி தினேஷ்… சார்பட்டா நடிகருக்கு வாய்ப்பு!

பா ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார்.

அட்டக்கத்தி படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் தலித் அரசியல் உரையாடலை பேசி இப்போது வரை அதை முன்னெடுத்து செல்லும் பா ரஞ்சித்தின் முதல் படம். இந்த படத்தில்தான் சந்தோஷ் நாராயணனும் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதிலிருந்து அவர்களின் கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஆனால் இந்த படத்துக்கு முதல் முதலாக தென்மா இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமான அட்டக்கத்தி தினேஷ் இப்போது விலகியுள்ளாராம். அவருக்கு பதிலாக பா ரஞ்சித்தின் நெருங்கிய நண்பரான கலையரசன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.