பசுக்களை ஏற்றி சென்ற டிரைவரை அடிதத பசுக்காவலர்கள்.. கால்வாயில் வீசியதால் அதிர்ச்சி..
பசுக்களை ஏற்றி சென்ற டிரைவர் மற்றும் கிளீனரை அடித்து உதைத்து வாய்க்காலில் வீசிச் சென்ற பசு காவலர்களால் ஹரியானா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பசுக்களை ஏற்றிச் சென்ற லாரியை பசு காவலர்கள் திடீரென மறித்துள்ளனர். பசுக்களை கடத்திச் செல்வதாக எண்ணி, ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரையும் கொடூரமாக தாக்கி, கால்வாயில் தூக்கி வீசிவிட்டு எறிந்துள்ளனர்..
நீச்சல் தெரிந்ததால், ஓட்டுநர் உயிர்தப்பியதாகவும், கிளீனர் சந்தீப் என்பவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிகிறது. நேற்று, சந்தீப் உடல் கரை ஒதுங்கியிருந்ததை அடுத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அடுத்து, பசு காவலர்கள் என்ற பெயரில் செயல்பட்ட 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
லாரியில் இருந்த பசுக்கள் தகுந்த ஆவணங்களுடன் டிரைவர் கொண்டு சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம், ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran