செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (17:01 IST)

உங்களை காண அரசியல் களம் காத்திருக்கிறது: விஜயகாந்துக்கு கமல் வாழ்த்து

உங்களை காண அரசியல் களம் காத்திருக்கிறது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருடைய பிறந்த நாள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது என்பதும் தெரிந்ததே 
 
ஏற்கனவே விஜயகாந்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் விஜயகாந்துக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:  தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் விஜயகாந்த் அவர்களே’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இன்று காலை பேட்டியளித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்தார். அவருடைய இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
எனவே அதிமுக திமுக இல்லாத கூட்டணி ஒன்றை உருவாக்கினால் அதில் கமல் விஜயகாந்த் சேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்