தனித்து போட்டி என அறிவித்த சில நிமிடங்களில் வாழ்த்து கூறிய முக ஸ்டாலின்
தனித்து போட்டி என அறிவித்த சில நிமிடங்களில் வாழ்த்து கூறிய முக ஸ்டாலின்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று கூறிய ஒரு சில நிமிடங்களில் விஜயகாந்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விஜயகாந்த் பிறந்தநாளை அடுத்து இன்று தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ’தேமுதிக தலைவர் விஜயகாந்த் இனி கிங் ஆக இருப்பார் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றும் கூறினார்
ஆனால் அதே சமயத்தில் தனித்து போட்டியா? கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்த ஒரு சில நிமிடங்களில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்கு பாத்திரமாகத் திகழ்ந்தவரும் எனது இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 68ல் அடி எடுத்து வைக்கும் அவர் பல்லாண்டு வாழவும், நலமும் வளமும் பெற பெரிதும் விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்
அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது