செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (15:30 IST)

ரஜினிகாந்த் & லோகேஷ் இணையும் கூலி திரைப்பட ரிலீஸில் நடந்த மாற்றம்…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக ஐதராபாத்தில் நடந்து வருகிறது.  லோகேஷ் கன்கராஜ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  மேலும் அமீர்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆந்திரா மழையால் பாதிக்கப்பட்டிருந்த ஷூட்டிங் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து  வருகிறது. முதலில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ரிலீஸ் சில மாதங்கள் தள்ளிப் போய் ஜூன் மாதத்தில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ரஜினிகாந்த் ‘ஜெய்லர் 2’ படத்தையும் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.