திரிஷா இல்லன்னா தமன்னா… இந்தியன் 2 குழு எடுக்கப்போகும் முடிவு!
இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக திரிஷா நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்போது இந்தியன் 2 டிசம்பர் மாதத்துக்குப் பின் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் படத்தில் முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆன காஜல் அகர்வால் அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும், அவருக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அதே கதாபாத்திரத்துக்காக தமன்னாவிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இருவரில் யாராவது ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.