புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (08:45 IST)

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தீ விபத்து: ஆட்டோ, பைக், கார் எரிந்ததால் பரபரப்பு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் திடீரென இன்று ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் ஆட்டோ, கார் மற்றும் இரண்டு பைக்குகள் எரிந்து நாசமானது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
 
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக அந்த காரும், அதன் அருகில் இருந்த ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளிவந்தன
 
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கார் ஆட்டோ இருசக்கர வாகனங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இது குறித்து நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதன் காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியான ஆயிரம் விளக்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது