ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 மே 2019 (13:48 IST)

சுயமரியாதை இருந்தால் ஒடிசாவிடம் பாடம் கற்கட்டும்: கமல் காட்டம்

ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தபோது அந்த மாநிலத்தின் பெரும் பகுதியை பயங்கர சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. 
 
ஒடிசா தலைநகர் புவனேஷ்வர், பூரி உள்ளிட்ட பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேறோடு கீழே விழுந்துள்ளது. ஆனால், உயிர்ச்சேதம் பெரிய அளவில் இல்லாமல் தடுக்கப்பட்டது. 
 
ஒடிசா மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா அரசை மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார். 
 
கமல் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ஃபானி புயலை ஒடிசாவில் கையாண்ட விதம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒடிசா மாநில அரசுக்கு பாராட்டுக்கள். 
 
சுயமரியாதை உள்ள எந்தவொரு அரசும் ஒடிசாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு இன்னும் கஜா புயலை நினைத்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.