புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (09:40 IST)

சலசலப்பை ஏற்படுத்தி சலித்து போய்விடுவார்கள்: தமிழிசை கூறுவது யார் யாரை?

புதியதாக அரசியலுக்கு வந்திருக்கும் தினகரன், கமல்ஹாசன், சீமான் ஆகியோர் சலசலப்பை மட்டுமே ஏற்படுத்துவார்கள். ஆனால் அவர்களால் அரசியல் களத்தில் நீடிக்க முடியாது, கொஞ்ச நாளில் சலித்து போய்விடுவார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
தூத்துகுடி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை செளந்திரராஜன் நேற்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது  அவர் கூறியதாவது:
 
மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார. தமிழகத்தில் ஆட்சி அமைப்பேன் என ஸ்டாலின் அவசரப்பட்டு கூறுகிறார். அவரை எதிர்கட்சி தலைவராக பணியாற்றவே மக்கள் விரும்புகின்றனர். மேலும், தினகரன், சீமான், கமல்ஹாசன் ஆகியோர் சலசலப்பை மட்டுமே ஏற்படுத்துவார்கள், அவர்களால் அரசியல் களத்தில் நீடிக்க முடியாது
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு கமல், சீமான், தினகரன் கட்சி தொண்டர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.