திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 மார்ச் 2025 (09:46 IST)

திமுகவுடன் தொடர்பில் இருப்பதா? அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை..!

திமுகவுடன் தொடர்பில் இருக்கும் அதிமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
82 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் காணொளி மூலம் நேற்று நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு காணொளி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் பேசினார்.
 
அப்போது, அதிமுக நிர்வாகிகள் சிலர் உள்ளூர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் வந்துள்ளதாகவும், திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சரியான விளக்கம் அளிக்க அளிக்காவிட்டால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
 
ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதாக அதிமுக தலைமைக்கு புகார் வந்த நிலையில், இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva