ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (15:44 IST)

ஃபானி புயலை சிறப்பாக இந்தியா எதிர்கொண்டுள்ளது – ஐ.நா. பாராட்டு !

ஃபானி புயலை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா. சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் நேற்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு புவனேஸ்வர் விமான நிலையமும் மூடப்பட்டது. மேலும் இன்று ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து அங்கு புயல் கரையைக் கடந்த பின்னர் சூறாவளிக் காற்றும் பேய்மழையும் பெய்யத் தொடங்கியது. பஸ்கள் போன்ற கனரக வாகனங்களையே தூக்கி வீசும் வீடியோக் காட்சிகள் வெளியாகின. மேலும் கட்டிடங்கள் பல இடங்களில் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தும் மிகப்பெரிய சேதாரத்தை உருவாக்கியுள்ளன. இந்த புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 160 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக் காட்சிகள் வெளியாகி காண்போர் மனதை கணக்கச் செய்கின்றன. 

ஆனாலும் ஒடிசா மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவிலான உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டுள்ளது. ஃபானி புயலின் நகர்வை இந்திய வானிலை மையம் துல்லியமாக கணித்து பூஜ்ய உயிரிழப்பைக் கிட்டத்தட்ட எட்டியுள்ளது எனப் பாராட்டியுள்ளது.