செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (22:11 IST)

புதுவையில் கமல்-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியா?

புதுவையில் கமல்-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியா?
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தவிர, கமல்ஹாசன் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்த கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போதைக்கு சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் கட்சிகள் தவிர வேறு எந்த கட்சியும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் புதுவையிலும் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார். பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்த என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் மக்கள் நீதி மய்யம் மற்றும் என் ஆர் காங்கிரஸ் இணைந்து புதுவையில் தேர்தலில் போட்டியிடும் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் கமல்ஹாசன் மற்றும் ரங்கசாமி ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது