1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (19:39 IST)

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளக்குறிச்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை தாக்க முயற்சி செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற சென்ற சாட்டை துரைமுருகன் கள்ளக்குறிச்சி சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கருணாபுரம் கிராம மக்கள் சிலருக்கும், சாட்டை துரைமுருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
 
வாக்குவாதத்தின் போது சாட்டை துரைமுருகனை தாக்க முயன்ற இளைஞரால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் சமாதானம் செய்து, சாட்டை துரைமுருகனை பொதுமக்கள் காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரண நிதி ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதுதான் பரபரப்பு ஏற்படுத்தியது என்றும் இதனால் தான் அந்த இளைஞர் சாட்டை துரைமுருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
Edited by Siva