1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (19:28 IST)

கலாஷேத்ரா முன்னாள் நடன ஆசிரியர் கைது.. 15 வருடங்களுக்கு முன் பாலியல் தொல்லை என புகார்..!

பாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் நடன ஆசிரியரான ஸ்ரீஜித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வருடங்களுக்கு முன் பாலியல் தொல்லை அளித்தாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கைதான லாஷேத்ரா முன்னாள் நடன ஆசிரியரான ஸ்ரீஜித்திடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
முன்னதாக சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது இன்னொரு நடன ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.  
 
கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் மாணவிகள் சிலரும் கலாஷேத்ராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva