1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2023 (17:53 IST)

திரையுலகினர் நடத்த இருந்த கலைஞர் 100' விழா இடமாற்றம்: புதிய இடம் எங்கே?

தமிழ் திரை உலகினர் இணைந்து கலைஞர் 100 என்ற விழாவை நடத்த இருந்த நிலையில் அந்த விழாவின் இடம் தற்போது மாறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
டிசம்பர் 24ஆம் தேதி கலைஞர் 100 விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் ஜனவரி 6ஆம் தேதிக்கு இந்த விழா  மாற்றப்பட்டது என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 
 
அதேபோல் இந்த விழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற வருவதால் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran