1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (18:20 IST)

இலவசங்கள் வேண்டாம் என்று சொன்ன மோடி குஜராத்தில் இலவச அறிவிப்பு செய்தது ஏன்? கி.வீரமணி

Veeramani
இலவசங்கள் வேண்டாம் என்றும் இலவசங்களால் நாடு கெட்டுப் போனது என்று சொன்ன பிரதமர் மோடி குஜராத்தில் மட்டும் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்தது ஏன் என்ற கேள்வியை திராவிட கழக தலைவர் கி வீரமணி எழுப்பி உள்ளார்
 
அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலவசங்களால் நாடு கெட்டுப் போனது என்று சொன்ன மோடி இப்போது குஜராத்தில் சமையல் எரிவாயு இலவச அறிவிப்பு செய்தது ஏன் என்று கேள்வியை எழுப்பி உள்ளார்
 
கடந்த சில வாரங்களாக குஜராத்தில் எண்ணெய் விலை ஏறவே இல்லை. வழமையான தேர்தல் முடியும் வரை ஏறாது, தேர்தல் முடிந்தவுடன் பரமபத பாம்பு போல பயங்கரமாக ஏறும், குறிப்பாக பெட்ரோல் விலை ஏறும் என்பது வாடிக்கை தான் என்பது நாடறிந்த ஒன்று தானே 
 
தேர்தல் தேதியை அறிவித்து விட்டால் இலவச சலுகை அறிவிப்புகள் போன்றவை அறிவிக்க முடியாது என்பதால் குஜராத் தேர்தல் தேதியை மட்டும் அறிவிக்காமல் தேர்தல் கமிஷன் மவுனம் காக்கிறது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்
 
Edited by Siva