1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2022 (15:20 IST)

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டம்: தமிழகத்திற்கு 3 வது இடம் !

anbarasan
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தமிழகத்திற்கு 3 வது இடம் கிடைத்துள்ளது.
 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை அறிவித்து அனைத்து மாநிலங்களிலும் இதைச் செயல்படுத்தி வருகிறது.


இந்த  நிலையில், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறம் துறையின் மூலம் செயல்ப்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் சிறப்பாகச் செயப்படுத்தியதற்காக இந்தியளவில் தமிழ் நாடு 3 வது இடம் பிடித்துள்ளது.

குஜராத் மா நிலத்தில் நேற்று நடந்த தமிழக சிறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதைப் பெற்றார்.

Edited by Sinoj