வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 மார்ச் 2021 (16:12 IST)

தன்னை நம்பி வந்த பெண்களையே காப்பாற்றாதவர்… கமலை தரக்குறைவாக விமர்சித்த ராதாரவி!

நடிகரும் பாஜக ஆதரவாளருமான ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு  ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராதாரவி தமிழகத்தில் இருக்கும் எல்லாக் கட்சிகளிலும் கொஞ்ச கொஞ்ச காலம் இருந்து வந்துள்ளார். இப்போது பாஜகவில் இணைந்துள்ள அவர் இப்போது கோவையில் வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘கமல் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை நம்பி வந்த பெண்களையே கைவிட்டவர். அப்படி இருக்கையில் எப்படி தமிழக மக்களைக் காப்பாற்றுவார். வானதியின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக அவர் செயல்பட்டு வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.